புதுடெல்லி,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறது.
இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியுடன் வெளியேறின.
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.