பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார்.
கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.
லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.