தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
30 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரியானா-ஒடிசா அணிகள் மோதுகின்றன.
அரியானா அணி லீக் ஆட்டங்களில் இமாச்சல பிரதேசம் (12-1), தெலுங்கானா (5-1), மிசோரம் (8-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் 5-1 என்ற கணக்கில் மராட்டியத்தையும், அரைஇறுதியில் உத்தர பிரதேசத்தை 3-2 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
ஒடிசா அணி ‘லீக்’ ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-1), புதுச்சேரி (6-2), அருணாச்சல பிரதேசம் (9-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கணக்கில் கர்நாடகாவையும், அரை இறுதியில் 4-2 என்ற கணக்கில் மணிப்பூரையும் தோற்கடித்தது.
இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதில் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிற்பகல் நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் மணிப்பூர்-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.