இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனம் ; திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்!!

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இந்லையில், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டாது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிப்பூர் விவகாரத்தில் இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம், திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் 2026ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள். ஒன்றிய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும்.

மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50% நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *