திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 7 நபர்களும் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள பதிவில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நேற்றைய தினம் திருவண்ணாமலையின் தீபமலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் உள்பட மொத்தம் 7 நபர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது 7 நபர்களும் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.