கோயம்புத்தூர்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமை மற்றும் நல்வாழ்வை, சமூகத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் பரப்பி, அவர்களின் மேம்பாட்டை பொது மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகப் பங்கேற்றவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு ஹை-ஃபைவ் எனும் பிரத்யேக இயக்கம் மேற்கொண்டனர்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர்.க .மாதேஸ்வரன் நிகழ்வைத் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றினார்.
தேசிய பரா டி.டி. சாம்பியன் டாக்டர்.அவினாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த நிகழ்வைச் சிறப்பித்தார்.
முன்னதாக, ராயல் கேர் மருத்துவமனையின் உடல் மருத்துவம் மற்றும் புணர்வாழ்வு துறை ஆலோசகரும், துறைத் தலைவருமான டாக்டர் ஆர். பிரியவதனா, இந்த நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் டாக்டர் விஜய் குமார் மண்டா, ஆலோசகர், டாக்டர் பி. பரந்தமன் சேதுபதி, மருத்துவ இயக்குநர், டாக்டர் கே.டி. மணிசெந்தில்குமார், முதன்மை செயல்பாட்டு அதிகாரி, மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.