சென்னை:
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 06ம் தேதி நாக்பூரில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 305 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 32 வது சதம் அடித்து 119 ரன்கள் குவித்தார்.