சென்னை;
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று கூடி உள்ளோம். கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் போராடியதால் தான் சுதந்திரம் கிடைத்தது. தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும்.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம். இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக மிக முக்கியமான நாள்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் நம்மைப் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என கூறினார்.