சென்னை ;
மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சென்னை வருகை தந்தார்.
சென்னை விமான நிலையத்தில் டி.கே. சிவக்குமாரை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.