சென்னை:
வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் கடந்த மாதம் இருந்த ரூபாய் 818.50 விலையே தொடர்கிறது.
தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை சரிந்து உள்ளது. கடந்த மாதம் ரூ.5.50 காசுகள் உயந்த நிலையில் இந்த மாதம் ரூ.43.50 காசுகள் குறைந்து உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல், கடந்த மாதம் இருந்த ரூ.818.50 என்ற விலையே தொடருகிறது.