சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்- சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷு ராஜாவத்- ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.
முதல் செட்ட இந்திய வீரரும் அடுத்த 2 செட்டை ஜப்பான் வீரரும் வென்றனர். இதன்மூலம் ராஜாவத் 21-14, 10-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர்.
அதன்படி இந்தியாவின் அன்மோல் கார்ப், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சென் யு பெய்யுடன் மோதினார். இதில் 11-21, 24-22 என்ற செட் கணக்கில் வெளியேறினார்.
ரக்ஷிதா ராம்ராஜ் 14-8, 8-21 என்ற செட் கணக்கில் படுமோசமாக தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மாள்விகா பான்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபனிதாவுடன் மோதினார்.
முதல் செட்டை கைப்பற்றிய மாள்விகா அடுத்த 2 செட்டுகளையும் இழந்தார். இதனால் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.