”கார்த்தி 27” படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை வெளியாகுவதாக அறிவிப்பு!!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். ‘கார்த்தியின் 27’-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அப்டேட்கள் இன்று மாலை 5 மற்றும் இரவு 7 மணிக்கும் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *