ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களைவிற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை

சேலம்,
ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்தியாவில் தனது 25வது ஆண்டு விழாவையும், உலகளவில் 130வது ஆண்டு விழாவையும் கொண்டாடும் வேளையில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 36,194 க்கும் மேலான வாகனங்களை விற்பனை செய்து, ஸ்கோடா ஆட்டோ-ஆனது இந்தியாவில் அதன் 25 ஆண்டு வரலாற்றில் அதன் அதிகபட்ச அரை ஆண்டு விற்பனையை எட்டியுள்ளது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது, “எங்கள் மைல்கல் அரையாண்டு விற்பனையானது, இந்தியாவில் ஸ்கோடா தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் வலுவாக ஏற்றுக்கொள்வதை பிரதிபலிக்கிறது.

எங்கள் போர்ட்ஃபோலியோவில் கைலாக் சேர்க்கப்பட்டதன் மூலம், ‘அனைவருக்கும் எஸ்யூவி ‘ எனும் மந்திரம் மற்றும் எங்கள் செடான் சலுகை ஆகியவற்றின் மூலம் அவர்களின் பயணங்களை இப்போது இன்னும் அதிகமாக்குகிறோம். நாடு முழுவதும் எங்கள் அணுகக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் டச் பாயிண்ட்கள் மூலம் இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் ‘நெருக்கமாக’ இருப்பதே எங்கள் நோக்கமாகும்.

இந்த சாதனையானது, சமயோஜிதமான தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம் பொருத்தமானதாக இருப்பதில் கவனம் செலுத்தவும், எங்கள் தயாரிப்பு மற்றும் சேவை சலுகைகளை ஒப்பற்றதாக செய்வதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மதிப்பை வழங்கவும், இணையற்ற ஓனர்ஷிப் அனுபவத்துடன் நம்பிக்கையைத் தொடர்ந்து வளர்க்கவும் ஊக்குவிக்கிறது.

” என்றார்.2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 36,194 வாகனங்களுக்கு மேலான விற்பனையுடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இப்போது இந்தியாவின் முதல் ஏழு ஆட்டோமோட்டிவ் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் அதன் தரவரிசையிலிருந்து நான்கு இடங்கள் முன்னேறியுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் சிறந்த அரையாண்டு விற்பனையான 28,899 வாகன விற்பனையை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 36,194 வாகனங்களுக்கு மேலான விற்பனையுடன் முந்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *