கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவும் நாவல் பழம் !!

சாலை ஓரங்களிலும், குளம் மற்றும் ஆற்றங்கரைகளிலும் பரவலாக காணப்படும் நாவல் மரம், அரிய பல மருத்துவ பலன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தென்னிந்திய காடுகளிலும் இவற்றை அதிக அளவில் காணலாம்.

நாவல் பழத்தின் பலன்கள்:

இது கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தவும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

நாவல் பழத்தை உட்கொள்வதால் குடல் இயக்கம் சீராகி, செரிமான சக்தி அதிகரிக்கும்.

பழத்தை சாறாகப் பிழிந்து பருகி வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது நிவாரணம் அளிக்கும்.

நாவல் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

இது உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். மேலும், இரத்தத்தைச் சுத்திகரிக்கும் பண்பையும் கொண்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நாவல் பழத்தை அதிக அளவில் உட்கொண்டால் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்படலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *