தினமும் 4 கப் காபி குடிப்பது இதயத்தை பாதிக்கும்!!

ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம்.

வேலைக்கு புறப்பட்டு செல்லும்போதும், சரி திரும்பி வரும்போது சரி டீ கடை ஓரத்தில் வண்டியை நிறுத்தி ஒரு டீயோ அல்லது காபியோ குடித்துவிட்டுத் தான் உற்சாகமாக புறப்படுவார்கள்.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வதற்குள் எப்படியும் ஐந்தாறு காபி குடித்து விடுவேன் என்று சொல்லும் பலரை தினமும் பார்த்து இருப்போம்.

ஆனால் அந்த காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

டெல்லியில் அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறையில் நடந்த கருத்தரங்கில் இந்த அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். அதிகப்படியான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். இது உடலின் ‘பாராசிம்பேடிக்’ அமைப்பை தொந்தரவு செய்யலாம். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும்.

இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். காபி, டீ மற்றும் பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் ஆகிய பானங்களை அடிக்கடி குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். அதில் பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. நகர வாழ்க்கை முறை மற்றும் தொழில் ரீதியான பழக்கங்கள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *