கீரைகள் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை மிகவும் முக்கியமானது. உணவில் தாளித்து சாப்பிடும் போது தூக்கி எறிந்திடுவோம்.
அப்படி புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் சத்துகள் குறித்து நம் மனதில் பதிய வைத்துவிட்டால் தூக்கி எறிய மனம் வராது. பலவகை சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது தான் கறிவேப்பிலை. அதாவது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.
மேலும் கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவையும் அடங்கி உள்ளது.
கறிவேப்பிலையை நீண்டநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவுபெறும்.
பசியின்மை, செரிமான பிரச்சினை, வயிற்று இரைச்சல், தொண்டைக் கமறல் சரியாகும். நீரிழிவு நோயாளிகள் தலா 10 கறிவேப்பிலையை காலை, மாலை நேரத்தில் மென்று சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.
சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். உடல் பருமன் குறைந்து உடல் வலிமை அதிகரிக்கும்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்து அரைத்து ஒரு எலுமிச்சம்பழம் அளவுக்கு எடுத்துக்கொண்டு தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி நின்றுவிடும்.