திருமலை, திருச்சானூர் பகுதி கோவில்களில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள்!!

திருப்பதி
இந்த மாதம் (செப்டம்பர்) திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-ந்தேதி விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி, 4-ந்தேதி வாமன ஜெயந்தி, 6-ந்தேதி அனந்த பத்மநாப விரதம், அதையொட்டி கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம், 8-ந்தேதி மஹாளய பக்‌ஷம் தொடக்கம், 10-ந்தேதி ப்ருஹத்தியுமா விரதம், 16-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 21-ந்தேதி மஹாளய அமாவாசை, 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம், 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், 28-ந்தேதி கருட சேவை, 29-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2-ந்தேதி வருடாந்திர பவித்ரோற்சவத்தையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

4-ந்தேதி பவித்ரோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம். 5-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. 7-ந்தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2.15 மணி முதல் கோவில் மூடப்படுகிறது.


12, 19, 26-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) மாலை 6 மணியளவில் பத்மாவதி தாயார் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சுந்தரராஜசாமி கோவில்
சுந்தரராஜசாமி கோவிலில் 9-ந்தேதி உத்தர பாத்ரா நட்சத்திரத்தன்று மாலை 6 மணிக்கு உற்சவர் சுந்தரராஜசாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பலராம கிருஷ்ணசாமி கோவிலில் 14-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தன்று மாலை 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சூரிய நாராயணசாமி கோவில்
சூாியநாராயணசாமி கோவிலில் வருகிற 23-ந்தேதி ஹஸ்த நட்சத்திரத்தன்று மாலை 5 மணிக்கு சாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சீனிவாசர் கோவில்
சீனிவாசர் கோவிலில் 6, 13, 20, 27-ந்தேதி சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு மூலவர் வெங்கடேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *