போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!!

இங்கிலாந்து;
இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில் லண்டனில் பிரமாண்ட பேரணி நடந்தது.


சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்கள் லண்டன் வீதிகளில் இறங்கி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக் காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் 26 போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது.

இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு.

நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *