சுப்மன் கில் கேப்டனாக போவதை அன்றே கணித்த ரோகித்…

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.


ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார்.

ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே ரோகித் விளையாடி வரும் நிலையில், அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில், ரோகித் சர்மாவின் பழைய டுவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ரோகித் தனது எக்ஸ் பதிவில், “45 எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தாமல் 77 எண் கொண்டஜெர்சியை அணிந்து விளையாட போவதாக ரோகித்” தெரிவித்திருந்தார்.

அதன்படி சில காலத்திற்கு 77 ஜெர்சியை அணிந்து ரோகித் விளையாடினார். ஆனால் பின்னர் மீண்டும் 45 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடிய ரோகித் தற்போது வரை அந்த ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.

தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் 77 எண் கொண்ட ஜெர்சியில் விளையாடி வருகிறார்.

அவ்வகையில் தனக்கு அடுத்து யார் கேப்டனாக ஆகா போகிறார் என்பதை ரோகித் முன்னரே கணித்து விட்டார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *