சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர்.
தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மூத்த அரசியல் தலைவர் அய்யா ராமதாஸ், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் பூரண குணமடைந்து வழக்கமான பணிகளுக்குத் திரும்பிட விழைகிறோம். என தெரிவித்துள்ளார்