இந்த வார விசேஷங்கள்…..

11-ந் தேதி (செவ்வாய்)

* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கருட வாகனத்தில் பவனி.

* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி காந்தி மதியம்மன் சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கில் பவனி.

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

* திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தவசுக்கு புறப்படுதல்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் பவனி.

* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

* சுமார்த்த ஏகாதசி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.

* கடையம் விசுவநாதர் திருக்கல்யாணம்.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* வைஷ்ணவ ஏகாதசி.

* மாயவரம் கவுரிநாதர் கடைமுகம், உற்சவ தீர்த்தவாரி, விருட்சப சேவை.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.

* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

* பிரதோஷம்.

* முடவன் முழுக்கு.

* ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *