டெல்லி கார் குண்டு வெடிப்பு சதி​காரர்​களை நீதி​யின் முன் நிறுத்​து​வோம் என பூடானில் பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி!!

புதுடெல்லி:
டெல்லி கார் குண்டு வெடிப்பு சதி​காரர்​களை நீதி​யின் முன் நிறுத்​து​வோம் என பூடானில் பிரதமர் நரேந்​திர மோடிஉறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

பூடான் அரசு சார்​பில் தலைநகர் திம்பு நகரில் உலக அமைதி பிரார்த்​தனை திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. மேலும் அந்​நாட்​டின் 4-வது மன்​னர் ஜிக்மே சிங்யே வாங்​சுக்​கின் 70-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் பயண​மாக நேற்று பூடான் புறப்​பட்​டுச் சென்​றார். உலக அமைதி பிரார்த்​தனை திரு​விழா​வில் நேற்று பங்​கேற்ற பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

பூடானின் 4-வது மன்​னர் வாங்​சுக், பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோ​ருக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த நாள் பூடானுக்கு மட்​டுமல்ல, உலக அமை​தி​யில் நம்​பிக்கை கொண்ட அனை​வருக்​கும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாள். இந்​தி​யா- பூ​டான் இடையி​லான கலாச்​சார, ஆன்​மிக மற்​றும் வளர்ச்சி கூட்​டுறவு பல நூற்​றாண்​டு​கள் பழமை​யானது. இரு நாடுகளிடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெறும்.

இன்று மிக கனத்த இதயத்​துடன் இங்கு வந்​துள்​ளேன். டெல்​லி​யில் நடை​பெற்ற கொடூர​மான சம்​பவம் அனை​வரை​யும் மிக​வும் துயரத்​தில் ஆழ்த்தி உள்​ளது.

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரின் துயரத்தை என்​னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்று முழு தேசமும் அவர்​களுக்கு ஆதர​வாக நிற்கிறது.

இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்தி வரும் அனைத்து அமைப்​பு​களு​ட​னும் திங்​கள்​கிழமை இரவு முழு​வதும் நான் தொடர்​பில் இருந்​தேன். எங்​கள் அமைப்​பு​கள் இந்த சதி​யின் அடித்​தளத்தை கண்​டு​பிடிக்​கும்.

இதற்குப் பின்​னால் இருக்​கும் சதி​காரர்​களை தப்ப விட​மாட்​டோம். அவர்​கள் அனை​வரும் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசும்​போது, “டெல்​லி​யில் நிகழ்ந்த கொடூர​மான சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு இதயப்​பூர்​வ​மான இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த சம்​பவம் தொடர்​பாக முன்​னணி புல​னாய்வு அமைப்​பு​கள் வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றன. அதன்​ விவரம்​ விரை​வில்​ வெளி​யிடப்​படும்​” என்​று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *