உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அயர்லாந்திடம் போர்ச்சுகல் தோல்வி!!

டப்ளின்:
2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது.

இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஐரோப்​பிய தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் இரவு அயர்​லாந்​தின் டப்​ளின் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘எஃப்’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள போர்ச்சுகல் – அயர்​லாந்து அணி​கள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் உலகக் கோப்​பை​யில் விளை​யாட தகுதி பெறலாம் என்ற நிலை​யில் போர்ச்​சுகல் அணி களமிறங்​கியது. ஆனால் துர​திருஷ்ட​வச​மாக அந்த அணி 0-2 என்ற கோல் கணக்​கில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தது. அயர்​லாந்து அணி சார்​பில் ட்ராய்பரோட் 17 மற்​றும் 45-வது நிமிடங்​களில் கோல் அடித்து அசத்​தி​னார்.

இந்த தோல்​வி​யால் போர்ச்​சுகல் அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. இது ஒரு​புறம் இருக்க அயர்​லாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தின்​போது 61-வது நிமிடத்​தில் போர்ச்​சுகல் அணி​யின் நட்​சத்​திர வீர​ரான கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோவுக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது.

அயர்​லாந்து டிஃபென்​ட​ரான தாரா ஓ’ஷி​யா​வை, ரொனால்டோ தனது முழங்​கை​யால் இடித்து தள்​ளி​னார்.

இதற்​காக அவருக்கு களநடு​வர் ரெட் கார்டு வழங்​கி​னார். இதனால் ரொனால்டோ வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெறும் அர்​மேனி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பங்​கேற்க முடி​யாது. இந்த ஆட்​டத்​தில் போர்ச்​சுகல் வெற்றி பெற்​றால் உலகக் கோப்பை தொடருக்கு எளி​தாக தகுதி பெறும்.

ஃபி​பா​வின் ஒழுங்கு விதி​களின்​படி, முரட்​டுத்​தன​மாக ஃபவுல் செய்​தால் 2 ஆட்​டங்​களில் தடை​வி​திக்​கப்பட வேண்​டும்.

வன்​முறை நடத்​தை, முழங்​கை​யால் இடித்து தள்​ளி​னால் 3 போட்​டிகளில் விளை​யாட தடை​வி​திக்​கப்பட வேண்​டும்.

கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ விவ​காரத்​தில் ஃபிபா விசா​ரணை மேற்​கொண்டு தடை உத்​தரவை பிறப்​பித்​தால் உலகக் கோப்பை தொடரின் சில ஆட்​டங்​களில் கிறிஸ்டி​யானோ ரொனால்​டோ விளை​யாட முடி​யாத நிலை ஏற்​படும்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *