கடைசி நாளில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

சென்னை:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.

இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இப்போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அடுத்த 3 நாட்களும் அவர் விளையாடவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஜோ ரூட், “தேவை ஏற்பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்வார்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *