வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவயில் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியது!!

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன் முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.


இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.

வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் அவர் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்து.


வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவயில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *