தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.
இந்நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். முகமது அப்துல் சோயிப் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.