மாஸ்கோ,
உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது: புதினின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது.
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைன் உடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷியா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். நாங்கள் 2ம் கட்ட வரிகளை விதிக்க திட்டமிட்டு வருகிறோம். எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் வரி 100 சதவீதம் விதிக்கப்படும்” என்றார்.
முன்னதாக, ஒரு பக்கம் அமைதியை விரும்புவதாக புதின் கூறிக் கொண்டே மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக ட்ரம்ப் விமர்சித்தார். புதின் மீது அதிருப்தி அதிகரித்து வருவதால், ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படலாம் என்று ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப், “அதிபர் புதினின் செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.. அவர் சொன்னதைச் செய்பவர் என்று நினைத்தேன். அவர் அழகாகப் பேசுவார், ஆனால் இரவில் குண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவிக்கிறார். அது எனக்குப் பிடிக்கவில்லை.” என்று கூறியிருதார்.