தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு குப்பை வண்​டி​யில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி கண்​டனம் தெரி​வித்​த பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்!!

சென்னை:
தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு குப்பை வண்​டி​யில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்​கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கோவை காந்​திபுரத்​தில் புதி​தாகக் கட்​டப்​பட்​டுள்ள செம்​மொழிப் பூங்​கா​வில் சுத்​தம் செய்​யும் பணி​களில் ஈடு​பட்​டிருந்த தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கு குப்பை வண்​டி​யில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அரு​வருக்​கத்​தக்​கது. மனி​தாபி​மானமற்ற இச்​செயலை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

கழிப்​பறை​யில் கூட காசு பார்த்து கொள்​ளை​யடிக்​கும் திமுக தலை​வர்​களை ராஜமரி​யாதை​யுடன் நடத்​தும் உங்​கள் அரசுக்​கு, நமது நாட்​டைச் சுத்​தப்​படுத்​தும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நாகரி​க​மான முறை​யில் உணவளிப்​ப​தில் என்ன சிக்​கல்? எங்​களுக்கு உணவளி​யுங்​கள் என்று தூய்​மைப் பணி​யாளர்​கள் கேட்​டார்​களா?

எதற்​காக ‘சோறு போடு​கிறோம்’ என்ற போர்​வை​யில் அவர்​களின் சுயமரி​யாதையை சீண்​டிப் பார்க்​கிறீர்​கள்? விளிம்பு நிலை மக்​கள் மீது திமுக​வுக்கு உள்ள வெறுப்பு இந்​தளவுக்​குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்​கள் கனவில் கூட நினைக்​க​வில்​லை.

திமுக அரசின் அகம்​பாவப் போக்கை மக்​கள் கவனித்​துக் கொண்​டு​தான் இருக்​கிறார்​கள். எல்​லா​வற்​றுக்​கும் வரும் தேர்​தலில் வட்​டி​யும் முதலு​மாக வாங்​கிக் கட்​டிக்​கொள்​ளத் தயா​ராகுங்​கள். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *