குவாஹாட்டி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும், ஒருநாள் போட்டி தொடர் தொடங்கவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 30ம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக இருந்த ஷுப்மன் கில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர் இன்னும் குணம் அடையாததால் கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய அணி தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் தொடரில் 2-வது போட்டி டிசம்பர் 3ம் தேதி ராய்ப்பூரிலும், 3-வது ஒருநாள் போட்டி டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெற உள்ளது.
அதன் பிறகு டிசம்பர் 9ம் தேதி முதல் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் நடைபெறவுள்ளது.
ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரெல்.