இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்!!

ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *