ஆண்டிபாளையம் :
ஆண்டிபாளையம் கிராமத்தில் சமீபத்தில் பசுமாடுகளுக்கான சினை ஊசி விழிப் புணர்வு மற்றும் நடைமுறை விளக்கப் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
அம்ரிதா வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் தலைமையில், ஜகரபாளையம் கால்நடை மருத்துவ நிலையத்தின் மருத்துவர் குழுவினர் தொழில்நுட்ப மேற்பார்வையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த முகாமின் முக்கிய நோக்கம், மாணவர்கள் சினை ஊசி முறையின் அவசியம், உயர் தர காளை விந்தணுக்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள், இனப்பெருக்க திறன் மேம்பாடு, அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட குட்டிகள் கிடைக்கும் போன்ற விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
மாணவர்கள், கருவுறுதலுக்கு மாடுகளின் ஊட்டச்சத்து மேலாண்மை, உடல் நிலை மதிப்பீடு, ஆரோக்கிய பரிசோதனையின் அவசியம் ஆகியவற்றை எளிமையாக விளக்கினர். ஜகரபாளையம் கால்நடை மருத்துவர்கள்,
பசுமாடுகளுக்கு சினை ஊசி வழங்கியதுடன், ஒவ்வொரு முறையும் மருத்துவ நடைமுறைகள் தகுந்த முறையில் செய்யப்பட்டனவா என உறுதி செய்து விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இம்முகாம் கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், முனைவர் சிவராஜ் ப, முனைவர் சத்தியப்ரியா இ, மற்றும் முனைவர் பிரான் எம் ஆகியோரின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மோனிகா ரெட்டி பி.எஸ்., ஸ்ரீதேவி எம். பி., அக்ஷயா பி., நந்தனா, தனலக்ஷ்மி என். எஸ்., தீபிகா சி., மாளவிகா, நிதின் கிருஷ்ணா, ராஜசேகர் ஏ., சந்தோஷ் .ச , ஸ்ரீஹரி அசோக் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.