குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​ நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் !!

சென்னை:
சமூக நலத்​துறை சார்​பில் சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டபடி, குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் இயக்​ககத்​தின் கீழ் செயல்​படும் நிறுவனங்கள், அலகு​களை அங்​கீகரிப்​ப​தற்​காக​வும், ஊக்​கு​விப்​ப​தற்​காக​வும் குழந்​தைகள் நலன் – சேவை விருதுகள் வழங்​கப்​படு​கின்றன.

இந்த ஆண்​டுக்​கான விருதுகள் – அரசு குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தஞ்​சாவூர் அன்னை சத்யா அம்​மை​யார் நினைவு அரசினர் குழந்​தைகள் இல்​லம், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​களின் கீழ் செயல்​படும் குழந்​தைகள் இல்​லங்​கள் என்ற பிரி​வில் தூத்​துக்​குடி புனித மரியன்னை கருணை இல்​லம், சட்​டத்​துக்கு முரணாக செயல்​பட்​ட​தாக கருதப்​படும் குழந்​தைகளுக்​கான இல்​லங்​கள் என்ற பிரி​வில் சென்னை அரசினர் கூர்​நோக்கு இல்​லம் மற்​றும் மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலகு என்ற பிரி​வில் ராம​நாத​புரம் மாவட்ட குழந்தைகள் பாது​காப்பு அலகு ஆகிய​வற்​றுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் விருது வழங்கினார்.

பரிசுத் தொகை​யாக தலா ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலைகளை​யும் வழங்​கி​னார்.

அமைச்​சர் கீ​தாஜீவன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், சமூக நலத் துறைச் செயலர் ஜெய ஸ்ரீமுரளிதரன், குழந்தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் துறை இயக்​குநர் ஷில்பா பிர​பாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்று தமிழக அரசு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *