சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர்; தனது 4-வது லீக் ஆட்​டத்​தில் இந்திய அணி வெற்றி!!

இபோ:
சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா​வின் இபோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று நியூஸிலாந்துடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி சார்​பில் அமித் ரோஹி​தாஸ் (4-வது நிமிடம்), சஞ்ஜெய் (32-வது நிமிடம்), செல்​வம் கார்த்தி (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் ஜார்ஜ் பேக்​கர் (42 மற்​றும் 48-வது நிமிடங்​கள்) 2 கோல்கள் அடித்​தார்.

6 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரில் இந்​தியா 4 ஆட்டங்​களில் விளை​யாடி 3 வெற்​றிகள், ஒரு தோல்​வியை பதிவு செய்து 9 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கனடாவுடன் நாளை (29-ம் தேதி) மோதுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *