சையது மோடி பாட்மிண்டன் தொடர்: நோசோமி ஒகுஹாராவை வீழ்த்திய தன்வி சர்மா

லக்னோ:
சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, முன்​னாள் உலக சாம்​பிய​னான ஜப்​பானின் நோசோமி ஒகுஹா​ராவை எதிர்த்து விளை​யாடி​னார்.

59 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 16 வயதான தன்வி சர்மா 13-21, 21-16, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு இந்​திய இளம் வீராங்​க​னை​யான உனதி ஹூடா 21-15, 21-10 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த தஸ்​னிம் மிர்ரை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்​குள் நுழைந்​தார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான மன்​ராஜ் சிங்​குடன் மோதி​னார். 43 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்தில் மன்​ராஜ் சிங் 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் பிர​னாயை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார்.

முன்​னாள் முதல் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற செட் கணக்​கில் சனீத் தயானந்தை வீழ்த்தி கால் இறு​திக்கு முன்​னேறி​னார். கால் இறுதி சுற்​றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்​டைச் சேர்ந்த பிரியன்ஷு ரஜாவத்தை எதிர்​கொள்​கிறார்.

மகளிர் இரட்​டையர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபி சந்த் ஜோடி 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்​கில் சக நாட்​டைச் சேர்ந்த ஜெனித் அபிகெ​யில், லிகிதா ஸ்ரீவஸ்​தவா ஜோடியை தோற்​கடித்து கால்​ இறு​திக்​கு முன்னேறியது. ஜப்பானின் ஒகுஹாராவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய இந்தியாவின் தன்வி சர்மா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *