செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மணத்தக்காளி கீரை!!

சத்து மிகுந்த கீரை வகைகள் தெருக்களில் அதிகமாக விற்கப்படுகிறது. அதிலும், தற்போதைய காலகட்டத்தில் மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்டது. பொதுவாக இதனை தமிழ்நாட்டில் நேரடி உணவாக சமைத்து உண்பது வழக்கம். இதனை தொடர்ந்து உணவாக உட்கொள்ளும் போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும்.

தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம். இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன.

நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.

உலக அளவில் தற்போது உள்நாட்டு கீரைகளை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *