தேர்​தலில் பாஜக -அதி​முக கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும் – வானதி சீனி​வாசன்!!

கோவை :
கோவை வேலாண்​டி​பாளை​யம் பகு​தி​யில் பா.ஜ.க சார்​பில் பொங்​கல் பண்​டிகை​யினை முன்​னிட்டு ’ தாமரை கோல திரு​விழா ’ என்ற பெயரில் கோலப்​போட்​டிகள் நடந்து வரு​கின்​றது. இந்​நிகழ்​வில் கலந்து கொண்ட பின்​னர், பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன் எம்​.எல்.ஏ கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பாஜக சார்​பில் தமி​ழ​கம் முழு​வதும் பொங்​கலை ஒட்டி தாமரைப் கோல திரு​விழா நடத்​தப்​படு​கிறது. இதை பிரதமரின் திட்​டங்​களை உரை​யாடும் நிகழ்​வாக நடத்​துகி​றோம்.

காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில், ஒரிஜினல் பராசக்தி திரைப்​படம் வந்​தது. கருணாநிதி வசனத்​தில் சிவாஜி கணேசன் நடித்​திருந்​தார். அந்த திரைப்​படத்​திற்கு இரண்டு நாட்​கள் மவுண்ட் ரோடில் உள்ள திரையரங்​கில் சென்​சார் செய்து 130 கட் கொடுத்​தார்​கள். அப்​படிப்​பட்ட பாரம்​பரி​யத்தை வைத்​திருக்​கும் ராகுல் காந்​தி, எமர்​ஜென்​சியை கொண்டு வந்து குரல்​வளையை நெறித்த காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த ராகுல் காந்தி ‘ஜனநாயகன்’ படத்தை பேசுகின்​றார்.

ஜனநாயகன் படத்​திற்கு கட் கொடுத்​திருக்​கின்​ற​னர். இது நீதி​மன்​றத்​தின் கையில் இருக்​கிறது என தெரிந்​தும், வேண்​டுமென்றே ஏதாவது ஒரு வழி​யில் பாஜகவை குறை சொல்ல வேண்​டும் என ராகுல்​காந்தி கருத்து சொல்​லி​யிருக்​கி​றார்.

பாஜக கூட்​ட​ணிக்கு கூடு​தல் கட்​சிகள் வந்து கொண்டே இருக்​கி​றார்​கள். இன்​னும் கூட்​ட​ணிக்கு பலர் வரு​வார்​கள். பா.ஜ.க தலை​வர்​கள் அனை​வ​ரும் தேசிய தலை​வர் கோவை வந்த பொழுதே பேசி​யிருக்​கி​றோம். டெல்​லி​யில் எல்​லோரும் நாளை சந்​திக்க போகி​றோம். இது எல்​லாம் தொடர்ச்​சி​யான ஒரு நடை​முறை​தான்.

பிரதமர் மோடி 23-ம் தேதி சென்​னை​யில் நடக்​கும் மாநாட்​டில் கலந்து கொள்ள இருக்​கி​றார். அப்​போது, கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் அந்த மேடை​யில் பங்​கேற்​பார்​கள். எந்​தெந்​தக் கட்​சிகள் எங்​கள் கூட்​ட​ணி​யில் இருக்​கின்றன என்று அப்​போது தெரிய​வ​ரும்.

தேர்​தலில் பாஜக -அதி​முக கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். தேர்​தலுக்​காக இந்த ஆண்டு பொங்​கலுக்கு ரூ.3,000-த்தை திமுக அரசு கொடுத்​துள்​ளது. இதைக் கண்டு மக்​கள் மயங்க மாட்​டார்​கள். தேர்​தலில் தி​முகவை மக்​கள் தோற்​கடிப்​பார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *