ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: தேமுதிகவுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று ஆண்டாள் தாயாரிடம் வேண்டிக் கொண்டேன். தேமுதிகவுக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளது.
பிரச்சாரப் பயணம் முடிந்து பிப்ரவரி 3-ம் தேதி சென்னை திரும்பிய பின்னர், கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணி குறித்து ஆலோசித்து, தக்க அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளது அவரது கருத்து. ஆனால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
திமுக ஆட்சியில் 50 சதவீதம் நல்லது நடந்துள்ளது. 50 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.