உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படும்!!

புதுடெல்லி:
உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது.

உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்​றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர்.

இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது.

இதில் அவர்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் ஒரு முக்​கிய உத்​தரவை ரேபரேலி மாவட்ட ஆட்​சி​யர் ஹர்​ஷிதா மாத்​தூர் பிறப்​பித்​துள்​ளார்.

இதில் அவர், மாற்​றுத் திற​னாளி​களின் புகார்​கள் மற்​றும் குறை​களைத் தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் செயல்படும் என அறி​வித்​துள்​ளார்.

அவர் தனது அறி​விப்​பில், ‘‘இந்த நடமாடும் அலு​வல​கம் வாயி​லாக மாற்​றுத் திற​னாளி​களின் பிரச்​சினை​களை மாநில ஆணை​யர் கேட்​டறிந்​து, அவற்​றுக்கு தீர்வு காண உரிய உத்​தர​வு​களை பிறப்​பிப்​பார்.

மாவட்ட ஊராட்​சி, சுகா​தா​ரம், சாலைப் போக்​கு​வரத்​து, ரயில்வே உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் அதி​காரி​களும் நடமாடும் அலு​வல​கத்​துடன் தொடர்​பில் இருப்​பார்​கள். மாற்​றுத்​திற​னாளி​களை மாவட்ட மருத்​து​வர் குழு​வினர் பரிசோ​தித்​து, மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ் வழங்​கு​வார்​கள்.மாற்​றுத்​திற​னாளி அடிப்​படையி​லான பாகு​பாடு தொடர்​பான புகார்​களும் இதில் விசா​ரிக்​கப்​படும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்த நடமாடும் அலு​வல​கம் பிப்​ர​வரி 2-ம் தேதி, ரேபரேலி​யின் ரதப்​பூர் சமூக மையத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த அறி​விப்​புக்கு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். அனைத்து மாவட்​டங்​களி​லும் இத்​திட்​டத்தை அறி​முகப்​படுத்த அவர் ஆலோ​சனை செய்து வரு​கிறார். ரேபரேலி​யில் அமைய இருப்​பது உ.பி.​யின்​ முதல்​ நடமாடும்​ அரசு அலு​வல​கம்​ ஆகும்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *