எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது – கே.பி.முனுசாமி!!

ஓசூர்:
எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கே.பி.முனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டு பேசும் போது, அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா.

கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்து சேர்த்த ஒரு குடும்பம், இன்று எடப்பாடியார் மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது.

தர்மம் தன் வேலையைச் செய்ததால் தான் அவர் சிறை செல்ல நேரிட்டது” என்று கூறினார்.

தொடர்ந்து, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓராண்டில் 56 கொலைகள் நடந்துள்ளன. போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதே இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக் காரணம்.

திமுக பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிசிடிவி ஆதாரங்களை மறைக்கக் காவல்துறை முயல்கிறது” எனச் சட்டம் ஒழுங்கு குறித்துக் குற்றம் சாட்டினார்.

மேலும், மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தன் குடும்பத்தின் வருமானம் மற்றும் அடுத்த முதல்வர் நாற்காலி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிந்திக்கிறார்” என்று கே.பி.முனிசாமி கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *