பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா

சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து 900 பாம்புகள் தப்பி சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தப்பிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றாலும், அவற்றை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல்களால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன, அதே நேரத்தில் 4,800 வீடுகள் சேதமடைந்தன.

சீனாவின் 62க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ளநீா் ஆபாயக் கட்டத்தைக் கடந்தது.54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் பேசிய அதிபா் ஷி ஜின்பிங், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட வேண்டும்.

காயம் அடைந்தவர்களுக்கு தங்கு தடையின்றி உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மக்களின் உயிர், உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *