அகமதாபாத்:
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி 145-143 என்ற புள்ளிகள் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சரிதாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் ஐதா செய்டனுடன் மோதுகிறார்.
அரை இறுதியில் தோல்வி அடைந்த சரிதா, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங்ஹூட்டிங்கை சந்திக்கிறார்