209 கிமீ வேகத்தில் கார் விபத்து; உயிர் பிழைத்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப்!!

2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.

விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.

என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *