தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும்: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்!!

தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும், இன்று மாலை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மூன்று முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த முறை தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொருப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உதயநிதி வரும் 19ம் தேதிக்கு மேல் துணை முதலமைச்சர் ஆகலாம் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுகுறித்த கேள்விக்கு ‘ காய்த்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை’ என சூசகமாக பதில் கூறி தவிர்த்தார். இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய விரும்பியதாக தெரிகிறது. அதன்படி இன்றைய அறிவிப்பில் உதயநிதி துணை முதலமைச்சாரவது, முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *