ஆஸ்திரேலிய அணியில் மாற்று வீரராக பியர்ட்மேன் தேர்வு!!

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அடுத்து இரு அணிகள் இடையே 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாட்டிகாமில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இதனால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கூப்பர் கன்னோலி கூடுதல் வீரராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹில் பியர்ட்மேன் மாற்று வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பியர்ட்மேன் சிறப்பாக பந்து வீசி 15 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 19 வயதான அவர் 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.

வேகப் பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மெரிடித் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது கன்னோலி பியர்ட்மேன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ..

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *