நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் – மாளவிகா மேனன் போலீசில் புகார்!!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் ‘இவன் வேற மாதிரி, பிரம்மன் வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.மாளவிகா மேனனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதற்கு மாளவிகா மேனன் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, ”வலைத்தளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்” என்றார்.

மேலும் வலைத்தளத்தில் தனக்கு எதிராக அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பதிவு வெளியிட்டவரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *