பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட் என அதன் உதய நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

ராஞ்சி:
பழங்குடியினரின் தியாகத்தால் வளர்ந்த மாநிலம் ஜார்க்கண்ட் என அதன் உதய நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உதயமானது ஜார்க் கண்ட். அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த தினமான நவம் பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியினரை திரட்டி போராடி 25 வயதில் சிறை சென்று இறந்த வர் பிர்சா முண்டா.

ஜார்க்கண்ட் உதய தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் உதய தினத்தில் அதன் சகோதர, சகோதரிக ளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பழங்குடியினரின் தியாகம் மற்றும் போராட்டத்தால், வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலம் நாட்டை எப்போதும் பெருமையடைய செய்துள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலம், வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும் என வாழ்த் துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *