நாம் தமிழர் கட்சியாலோ தமிழக வெற்றி கழகத்தாலோ திமுகவை தோற்கடிக்க முடியாது – அர்ஜுன் சம்பத்!!

நாம் தமிழர் கட்சியாலோ தமிழக வெற்றி கழகத்தாலோ திமுகவை தோற்கடிக்க முடியாது மத்தியில் ஆளும் பாஜகவால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலை அகற்றப்பட்ட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் சிலை வைக்கும் கலாச்சாரமும் கட்டவுட் வைக்கும் கலாச்சாரமும் பெருகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மிகப்பெரிய ஆடம்பரமான அளவில் நடந்தது. அவருக்காக பல இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. இவை நீதிமன்ற உத்தரவின் மீறுவதாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றம் பல்வேறு கெடுபிடிகளை விதித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் சிலைகள் திறக்கப்படுகிறது.

அது நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக கோவில்கள் முன்பாக உள்ள கடவுள் இல்லை என அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலைகளை அகற்ற வேண்டும். வஃக்பு மசோதா நிறைவேற்றப்படாமல் ஏதோ காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது.

அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஐயப்பனை முடிவு செய்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. எல்லோருக்குமான அரசு என கூறும் முதலமைச்சர் பிராமண சமூகத்தினரை மட்டும் அடக்கி ஒடுக்கி வருகிறார்கள், அதை நிறுத்த வேண்டும்.

முதலமைச்சர் ராமதாஸ் வைக்கும் விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் அவரை இழிவு படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு மீது விமர்சனங்கள் யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை அரசு கைவிட வேண்டும்.

ஐயப்பன் குறித்து பாடிய இசைவாணி மீது பல்வேறு இடங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி, ஓம் கார் பாலாஜியை கைது செய்த போலீசார் இசைவாணியையும் கைது செய்ய வேண்டும் .

தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பாஜகவா மற்ற கட்சிகளா என தான் இருக்கும். திமுகவிற்கு மாற்று அதிமுக அல்ல. அது பா.ஜ.க தான். சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் திராவிட மாடலா காமராஜரின் தேசிய மடல் என்பதுதான் வரக்கூடிய அரசியலாக இருக்கும்.

திமுக அரசு தோல்வி அடைய வேண்டும் என மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாம் தமிழராலோ தமிழக வெற்றி கழகத்தாலோ திமுகவை தோற்கடிக்க முடியாது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும். அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *