புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த உதயநிதி நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விகடன் பதிப்பகம் சார்பில்.” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் இந்த நூலை வெளியிட்டார்.

இதில் பேசிய விஜய், கூட்டணி அழுத்தம் காரணமாக விசிக தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறினார். திமுக கூட்டணி மைனஸ் ஆகும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த உதயநிதி, நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என கூறினார்.

இதேபோல் மன்னர் ஆட்சி நடப்பதாக விஜய் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார். அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு என கடுமையாக விமர்சித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *