நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், கஜோல் போன்றோரின் டீப் பேக் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தன.
இந்த நிலையில் தற்போது நடிகை பிரக்யாவின் ஆபாச டீப் பேக் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழில் ஜீவாவுடன் வரலாறு முக்கியம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி என் 4, லக்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெய்யுடன் நடித்து வருகிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
பிரக்யாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வலைத்தளத்தில் வெளியானது. அந்த பெண் பிரக்யா தோற்றத்தில் இருந்ததால் பலரும் அதை வைரலாக்கினர்.
இதனால் வருத்தமான பிரக்யா வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று மறுத்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வீடியோவை ஒரு கெட்ட கனவுபோல் நம்புகிறேன். தொழில்நுட்பம் என்பது நமக்கு உதவுவதற்காகத்தானே தவிர வாழ்க்கையை நாசமாக்குவதற்கு அல்ல.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற செயல்களை செய்பவர்களை பார்த்து பரிதாபப்பட முடியுமா? இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. வேறு பெண்கள் இதுபோன்ற கஷ்டத்தை சந்திக்க கூடாது என்று பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.