2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!!

சென்னை:

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 முனைப் போட்டி நிலவும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை. விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். விஜய் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துவிட்டது. இப்போது மட்டுமில்லை எப்போதுமே கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டின் போது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்துவிட்டார்.

ஆகையால் விஜயும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *